ரம்புட்டான் பழம் நன்மைகள் மற்றும் தீமைகள்

Spread the love

Rambutan Health Benefits and Side Effects in Tamil

rambutan Health Benefits and Side Effects in Tamil
Rambutan Health Benefits and Side Effects in Tamil

ரம்புட்டான் இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் காணப்படும் பழ வகைகளில் ஒன்று. ரம்புட்டானின் தாயகம் சீனா, மலேசியா, மற்றும் இந்தோனேசியா.

ADVERTISEMENT

ரம்புட்டான் என்றால் மலாய் மொழியில் முடி என்று அர்த்தமாம். இந்த பழத்தின் மேல் பகுதி அடர்ந்த முடி போன்ற அமைப்பில் உள்ளதால் இப்பழத்திற்கு ரம்புட்டான் என்ற பெயர் கிடைத்திருக்கலாம்.

மேலும் இப்பழம் ஆஸ்திரேலியா, கினி, ஆப்ரிக்கா, இலங்கை, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது.

ரம்புட்டான் ஒரு பூக்கும் வகை தாவரம். இது 12-20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. ரம்புட்டான் வெப்ப மண்டல நிலப்பகுதியில் வளரக் கூடிய ஒரு இருவித்திலைத் தாவரமாகும்.

மேலும் இதில் 1400-2000 வகைகள் உள்ளன. இது  இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, மற்றும் அடர்சிவப்பு போன்ற பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது.

ADVERTISEMENT

ரம்புட்டான் ஒரு குளுமையான பழம் என்பதால் கோடைகாலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும். ரம்புட்டான் பழத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். அதாவது பழத்தின் மேல்பகுதி உள்ளே உள்ள சதை மற்றும் விதைப் பகுதி.

பழத்தின் விதை மற்றும் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதனால் இரண்டிற்கும் நடுவிலிருக்கும் சதைப்பகுதி உட்கொள்ள மிகவும் ஏற்றது.

ரம்புட்டான் பழத்தின் சுவை மிகவும் இனிப்புச் சுவை மற்றும் ஒரு விதமான புளிப்புச் சுவைக் கொண்டது. பழத்தில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் உள்ளதால் இதன் விலையும் கொஞ்சம் அதிகம் தான்.

ADVERTISEMENT

ரம்புட்டான் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்(Rambutan Nutrition Facts 100g)

PrincipleNutrient Value
கலோரி75
கார்போஹைட்ரேட்16.02 g
புரதச்சத்து0.46 g
கொழுப்புச்சத்து0 mg
நார்ச்சத்து0.24 g
வைட்டமின் சி80 mg
கால்சியம் 10.6 mg
பாஸ்பரஸ்31 mg
Rambutan Nutrition Facts 100g

ADVERTISEMENT

ரம்புட்டான் ஆரோக்கிய நன்மைகள்(Rambutan Health Benefits in Tamil)

நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது

பல காலமாக ரம்புட்டான் பழம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியில் ரம்புட்டான் பழத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கும் பண்புகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ரம்புட்டான் பழம் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. மருத்துவர்கள் ஆலோசனையுடன் ரம்புட்டான் பழத்தை சீராக உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

ஆய்வின் படி ரம்புட்டான் பழம் எலும்புகள் பலவீனம் அடைவதைத் தடுக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதன் தோலில் காணப்படும் பினோலின் எனப்படும் கலவை எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. ரம்புட்டான் பழத்தை உட்கொள்வதன் மூலம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் அதன் நிலையை மேம்படுத்த முடியும்.

ADVERTISEMENT

அஜீரணக் கோளாறை சரி செய்ய உதவும்

ரம்புட்டான் பழம் அஜீரணத்திற்கு ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் உணவு செரிமானத்தை  துரிதப்படுத்த ரம்புட்டான் வீட்டு வைத்திய மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது‌ என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் பழத்தை சீராக உணவில் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை மேம்படுத்த முடியும். மேலும் அஜீரணப் பிரச்சினையிலிருந்து விடுதலைப் பெறலாம்.

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

ஒரு ஆய்வின் படி ரம்புட்டான் தோலில் காணப்படும் பினோலிக் கலவை இதயம் தொடர்பான பிரச்சினையை தடுக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரம்புட்டான் பழத்தை உட்கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களிலிருந்து விடுதலைப் பெறலாம்.

புற்றுநோயைத் தடுக்க உதவும்

ரம்புட்டான் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் அதிகம் உள்ளன. மேலும் இது புற்றுநோய் செல்கள் நமது உடலில் வளர விடாமல் தடுக்கிறது. ரம்புட்டான் பழத்தை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முடியும்.

ADVERTISEMENT

உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது

ரம்புட்டான் ஒரு ஆற்றலை அதிகரிக்க உதவும் பழ வகைகளில் ஒன்று. ஏனெனில் இதில் காணப்படும் அதிக அளவிலான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் உடலில் குளுக்கோஸை உண்டாக்கி ஆற்றலை அதிகரிக்கின்றன. ரம்புட்டான் பழத்தை சீராக உட்கொள்வதன் மூலம் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது

ஒரு ஆய்வின் படி ரம்புட்டான் பழச்சாற்றில் பாலிபினால் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாலிபினால் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் வல்லமை கொண்டது. இதன் அடிப்படையில் ரம்புட்டான் பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்

ரம்புட்டான் பழத்தில் அதிக அளவில் காணப்படும் வைட்டமின் ஏ உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆகையால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ரம்புட்டான் பழத்தை சாப்பிடலாம்.

ADVERTISEMENT

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

ரம்புட்டான் மரத்தின் இலைகள் முடி பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இதன் இலைகள் ஷாம்பு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே ரம்புட்டான் பழம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் எனக் கூறலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

ரம்புட்டான் பழத்தை சீராக உட்கொள்வதன் மூலம் சருமத்தைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

ரம்புட்டான் பழத்தின் பக்க விளைவுகள்(Rambutan Side Effects in Tamil)

ரம்புட்டான் பழத்தில் பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் இதை அதிகம் உட்கொள்ளும் போது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிய உணவுகளை உட்கொள்ளும் போது ஒவ்வாமைக்கு உட்படும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உட்கொள்வது மிகவும் நல்லது. 

ADVERTISEMENT

குறிப்பு: ரம்புட்டான் பழத்தை நேரடியாக உட்கொள்வதன் மூலம் அதன் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். மேலும் இதை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். இதைப் பழக்கடையில் மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம். வாங்கிய பின் கழுவி விட்டு பத்து டிகிரி செல்சியஸில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

Youtube – Don’t Forget To Subscribe!

This article discusses the health benefits, side effects and Nutrition of Rambutan fruit in Tamil.

ADVERTISEMENT

மேலும் படிக்க: மங்குஸ்தான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

Disclaimer: இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இது ஒரு சுகாதார நிபுணரின் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று இல்லை. மேலும், சந்தேங்கள் மற்றும் தகவலை உறுதிபடுத்திக்கொள்ள வாசகர்கள் கண்டிப்பாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!