மங்குஸ்தான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள்

Spread the love

Mangosteen Fruit Health Benefits and Side Effects in Tamil

Mangosteen Fruit Health Benefits and Side Effects in Tamil
Mangosteen Fruit Health Benefits and Side Effects in Tamil

மங்குஸ்தான் ஒரு வெப்ப மண்டல பயிராகும். மங்குஸ்தானின் தாயகம் சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதி. மேலும்  இலங்கையின் களுத்துறை, கம்பகா, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டி போன்ற மாவட்டங்களில் வீட்டு தோட்ட பயிராக பயிரிடப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் ஊட்டி மற்றும் குற்றால மலைப் பகுதியில் விளைவிக்கப்படுகிறது மற்றும் கேரளாவின் மலைப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

மங்குஸ்தான் ஒரு 7 மீட்டர் முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு மரத்தின் கனியாகும். மங்குஸ்தானின் வடிவம் ஒரு சிறிய பூசணிக்காய் போன்று இருக்கும். வெளிப்புறம் ஊதா மற்றும் உட்புறம் வெள்ளை நிறத்தில் காணப்படும். மங்குஸ்தான் இனிப்பு மற்றும் சற்று புளிப்பு சுவையும் கொண்டது.

இந்தியாவில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது, குறிப்பாக குஜராத்தில் கோஹம், கண்டத்தில் முருகுலா ஹன்னு, மற்றும் தமிழில் மங்குஸ்தான் என்றும் அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

Table of Contents

மங்குஸ்தான் பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து(Mangosteen Nutrition Facts 196g)

PrincipleNutrient Value
கலோரிகள் 143
கார்போஹைட்ரேட்டுகள் 35g
நார்ச்சத்து 3.5g
கொழுப்புச்சத்து 1g
புரதச்சத்து 1g
வைட்டமின் சி 9% RDI
வைட்டமின் B9 (ஃபோலேட்) 15% RDI
வைட்டமின் பி1 (தியாமின்) 7% RDI
வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்)6% RDI
மாங்கனீசு 10% RDI
தாமிரம்7% RDI
மக்னீசியம்6% RDI
Mangosteen Nutrition Facts 196g

ADVERTISEMENT

மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

மங்குஸ்தான் பழம் உடல் எடையைக் குறைக்க உதவும்

இந்த அவசர உலகில் மக்கள் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் பருமன் நோயால் அவதிப்படுகின்றனர். இக்காலத்தில் உடல் பருமனே பல நோய்களுக்கு மூலக்காரணமாக உள்ளது. ஆகையால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் பல நோய்கள் நம்மை தாக்குவதைத் தடுக்கலாம்.

மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும்  உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கும் ஏரளாமான ஊட்டச்சத்துக்கள் நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மிகவும் உதவும்.

மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக இரத்தப் போக்கைத் தடுக்க உதவும்

மங்குஸ்தான் சந்தைகளில் கிடைக்கும் காலங்களில் பழங்களை வாங்கி சாப்பிடுவது அல்லது  மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் அதிக இரத்தப் போக்கைக் குறைக்கும். மேலும் மங்குஸ்தான் பழத்தை சீராக சாப்பிட்டு வந்தால் மூல நோய் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

ADVERTISEMENT

மங்குஸ்தான் பழம் வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்

பொது வெளியில் நாம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நமது வாயிலிருந்து துர்நாற்றம் வெளியேறினால் அது நமக்கும் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் நபருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.

இப்பிரச்சினையைக் களைய மங்குஸ்தான் பழத்தை சீராக உட்கொள்ளுதல் அல்லது அதன் தோலை காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமடையும் கிருமிகளைக் கொல்லும்.

மங்குஸ்தான் பழம் கண் எரிச்சலைப் போக்க உதவும்

இந்த நவீன உலகத்தில் அதிகப்படியான கணினி மற்றும் தொடு திரை கைபேசி பயன்பாட்டால் கண்ணில் வறட்சி ஏற்பட்டு அதன் காரணமாக கண் எரிச்சல் உண்டாகும்.

பொதுவாக கோடைக்காலங்களில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக கண் எரிச்சல் மற்றும் உடலில் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக பலருக்கு தலை, கழுத்து மற்றும் சிறுநீர்க்கழித்தலில் பிரச்சினை உண்டாகும். இத்தகைய பிரச்சினைகளுக்கு மங்குஸ்தான் பழம் தீர்வு தரும்.

ADVERTISEMENT

இரத்த உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்

இக்காலத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பலர் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

மங்குஸ்தான் பழத்தை சீராக சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் கண்ணிற்கு செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும். இதன் காரணமாக கதிர்வீச்சு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

மங்குஸ்தான் பழம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்

மங்குஸ்தானில் காப்பர், மெக்னீசியம், மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதிலுள்ள பொட்டாசியம் – மாரடைப்பு மற்றும் கரோனரி போன்ற இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்க உதவும்.

மேலும் இது செல் மற்றும் உடலுக்குத் தேவையான முக்கிய திரவங்களை சம நிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ADVERTISEMENT

புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்

மங்குஸ்தான் பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய கோளாறை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் மங்குஸ்தான் பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ளவையாகும்.

இது செல்லுலார் க்ரஸ்ட் எனப்படும் இதய அழுத்தத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கோளாறை சரிசெய்ய உதவும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்

இக்காலத்தில் புதிய புதிய நோயால் மனிதர்கள் தாக்கப்படுவதும் அதனால் அவர்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதற்குக் காரணம் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருத்தல்.

மங்குஸ்தான் பழத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகள் ஏரளாமாக உள்ளன.மேலும் மங்குஸ்தான் பழத்தில் அதிகம் காணப்படும் வைட்டமின் சி சத்து நரம்பு மண்டலத்தைப் பராமரிக்க உதவுகிறது.

எனவே மங்குஸ்தான் பழத்தை சீராக சாப்பிட்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் பல நோய்கள் நம்மைத் தாக்குவதைத் தடுக்கலாம்.

ADVERTISEMENT

உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்

மங்குஸ்தான் பழத்தை உட்கொண்டால் உடலில் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மங்குஸ்தான் பழத்தில் நல்ல அளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. காலையில் ஒரு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டால் அது நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலைத் தருமாம்.

முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்

மங்குஸ்தான் பழத்தில் இயற்கையாகவே காணப்படும் ஆன்டி பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிர் பொருட்கள் பல விதமான சரும பிரச்சினைக்குத் தீர்வு வழங்குகிறது. குறிப்பாக மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதன் மூலம் முகப்பருக்கள், தோல் கறைகள், எண்ணெய் சருமம் மற்றும் உலர் சருமம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மங்குஸ்தான் பழத்தின் பக்க விளைவுகள்(Mangosteen Side Effects in Tamil)

மங்குஸ்தான் பழம் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது எனினும் இதனை அதிகாம உட்கொண்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மங்குஸ்தான் பழத்தை நன்றாக சுத்தம் செய்த  பின்னரே உட்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மங்குஸ்தான் பழத்தை அதிகம் உட்கொண்டால் இரத்தம் உறைய வாய்ப்புள்ளது. எப்பொழுதும் புதிய மங்குஸ்தான் பழத்தையே உட்கொள்ள வேண்டும். ஏனெனில் பழைய பழங்கள் வறண்ட சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

முக்கியமாக கருவுற்ற பெண்கள் மங்குஸ்தான் பழத்தை உட்கொள்ள கூடாது. ஏனெனில் அது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.

மேலும் தினசரி மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் புதிய உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்பு மங்குஸ்தான் பழத்தை உட்கொள்வது மிகவும் சிறந்தது.

ADVERTISEMENT

Youtube – Don’t Forget To Subscribe!

This article discusses the health benefits, side effects, and nutritions of Mangosteen fruit.

மேலும் படிக்க: வெண்ணெய் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

ADVERTISEMENT

Disclaimer: இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இது ஒரு சுகாதார நிபுணரின் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று இல்லை. மேலும், சந்தேங்கள் மற்றும் தகவலை உறுதிபடுத்திக்கொள்ள வாசகர்கள் கண்டிப்பாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!