கருஞ்சீரகம் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள்

Spread the love

Black Cumin Seeds Health Benefits and Side Effects in Tamil

karunjeeragam benefits and side effects in tamil
Karunjeeragam Benefits and Side Effects in Tamil

கருப்பு சீரகம், காலோஞ்சி, நிகெல்லா அல்லது நிஜெல்லா சாடிவா (அறிவியல் பெயர்) என்றும் கருஞ்சீரகம் அழைக்கப்படுகிறது. இது பூக்கும் தாவர வகைகளில் பட்டர்கப்(buttercup) குடும்பத்தைச் சேர்ந்தது.

ADVERTISEMENT

கருஞ்சீரகச்செடி 12 அங்குலம் (30 செமீ) உயரம் வரை வளரும் மற்றும் விதைகளுடன் ஒரு பழத்தை உற்பத்தி செய்கிறது. இது பல உணவு வகைகளில் சுவையான மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

சமையல் பயன்பாட்டிற்கு அடுத்தப்படியாக, கருஞ்சீரகம் அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது.

மேலும், இது மூச்சுக்குழாய் அழற்சி முதல் வயிற்றுப்போக்கு வரை என அனைத்திற்கும் இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்க நூற்றாண்டுகளாக உபயோகப்படுத்தபட்டு வருகிறது.

ADVERTISEMENT

கருப்பு சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்(Black Cumin Seeds Nutritional Facts 1000g)

PrincipleNutrient Value
இரும்புச்சத்து 105 mg
தாமிரம்18 mg
துத்தநாகம் 60 mg
பாஸ்பரஸ் 527 mg
கால்சியம் 1860 mg
வைட்டமின் B1(தியாமின்) 15.4 mg
வைட்டமின் B3(நியாசின்) 57 mg
வைட்டமின் B6(பைரிடாக்சின்) 5.0 mg
வைட்டமின் B9(ஃபோலிக் அமிலம்)160 mg
Black Cumin Seeds Nutritional Facts 1000g

கருஞ்சீரகம் ஆரோக்கிய நன்மைகள்(Black Cumin Seeds Health Benefits In Tamil)

கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்

கொலஸ்ட்ரால் என்பது உடல் முழுவதும் காணப்படும் கொழுப்பு போன்ற பொருள். பொதுவாக, உடல் சரிவர இயங்க சில கொலஸ்ட்ரால் தேவைப்பட்டாலும், அதுவே, அதிக அளவு இரத்தத்தில் குவிந்தால், இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனினும், ஆய்வில் கருஞ்சீரகம் கொலஸ்ட்ராலைக் குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.

ADVERTISEMENT

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது

கருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை புற்றுநோய் போன்ற நோய்களின் வளர்ச்சிக்கு உதவும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது.

பாக்டீரியாவை அழிக்க உதவும்

காது தொற்று முதல் நிமோனியா வரை பல ஆபத்தான நோய்த்தொற்றுகள் ஏற்பட பாக்டீரியாக்கள் காரணமாக உள்ளன. சில ஆய்வுகளில், கருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும் மற்றும் சில பாக்டீரியா பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

வீக்கத்தைக் குறைக்க உதவும்

கருஞ்சீரக விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல்வேறு நாள்பட்ட அழற்சிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும். இது மூட்டுகளுக்கு இடையில் உயவு வழங்குவதன் மூலம் மூட்டு வலிகளை குணப்படுத்துவதாக அறியப்படுகிறது.

ADVERTISEMENT

கருஞ்சீரகம் பற்களை வலிமையாக்க உதவும்

பற்கள் மட்டுமல்ல, ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் பலவீனமான பற்கள் போன்ற ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்திற்கும் கருஞ்சீரகம் நன்மை பயக்கும். குறிப்பாக, பல் வலியை குணப்படுத்த கருஞ்சீரகம் உதவும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்

ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் மறுபிறப்பு போக்கையும் உடைக்கலாம் என தெரியவந்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும்

கருஞ்சீரகம் உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி உடலை மெலிதாகவும், ஒழுங்காகவும் மாற்ற உதவும். ஆய்வுகளின்படி, கருஞ்சீரக விதைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்ளும்போது உடல் எடை குறைகிறது என தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது

இரத்த சர்க்கரையில், சீரம் கிரியேட்டினின் அளவுகள் மற்றும் இரத்த யூரியா அளவுகளைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நெஃப்ரோபதியை (நீரிழிவு சிறுநீரக சிக்கல்) குறைக்க கருஞ்சீரகம் உதவுகிறது. சிறுநீரகக் கற்கள் மற்றும் தொற்றுகளை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது

கல்லீரல் உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். இது நச்சுகளை நீக்குகிறது, மருந்துகளை வளர்சிதைமாற்றமடைய செய்கிறது, ஊட்டச்சத்துக்களை செயலாக்குகிறது மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியமான புரதங்கள் மற்றும் வேதிப்பொருட்களை உருவாக்குகிறது.

பல நம்பிக்கைக்குரிய விலங்கு ஆய்வுகளில், கருஞ்சீரகம் கல்லீரலை காயம் மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சரும மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

ஒளிரும் சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணெயை எலுமிச்சை சாறுடன் பயன்படுத்தலாம். மேலும், கருஞ்சீரகத்தில் முடியை வலுப்படுத்த மற்றும் முடி உதிர்வதைத் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததுள்ளன.

ADVERTISEMENT

கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள்(Black Cumin Seeds Side Effects in Tamil)

கருஞ்சீரகத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கலாம் அல்லது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

பாலூட்டும் தாயமார்கள் கருஞ்சீரகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனெனில், அது பாலூட்டும் போது ஏற்படுத்தும் பக்க விளைவு பற்றி சரியான தகவல் இல்லை.

கருஞ்சீரகத்தின் பயன்பாடு, அறுவை சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பிறகு இரத்த உறைதல் செயல்முறையைத் தடுக்கலாம். சில நேரங்களில், கருஞ்சீரகம் தோலில் பயன்படுத்தப்படும் போது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

Karunjeeragam Health Benefits and Side Effects in Tamil

Youtube – Don’t Forget To Subscribe!

This article discusses the health benefits and side effects of Black Cumin Seeds(Kalonji) in Tamil.

ADVERTISEMENT

மேலும் படிக்க: வெண்ணெய் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

Source: Healthline and Pharmeasy

Disclaimer: இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இது ஒரு சுகாதார நிபுணரின் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று இல்லை. மேலும், சந்தேங்கள் மற்றும் தகவலை உறுதிபடுத்திக்கொள்ள வாசகர்கள் கண்டிப்பாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!