கருப்பு ஏலக்காய் நன்மைகள்(Black Cardamom Benefits in Tamil)

Spread the love

Black Cardamom Benefits in Tamil
Black Cardamom Benefits in Tamil

கருப்பு ஏலக்காய் இந்தியாவிலும் பிற ஆசிய உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான ஒரு வாசனை பொருளாகும். மேலும், இது ஜிங்கிபெரேசி குடும்பத்தைச் சேர்ந்தாகும்.

கருப்பு ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்(Black Cardamom Nutrition Facts Per 100 grams)

PrincipleNutrient Value
கலோரிகள்311 Kcal
கொழுப்புச்சத்து6.7 g
கார்போஹைட்ரேட்டுகள்68 g
சோடியம்18 mg 
நார்ச்சத்து28 g   
புரதச்சத்து11 g    
வைட்டமின் சி21 mg
கால்சியம்383 mg
இரும்புச்சத்து13.97 mg
பொட்டாசியம்1119 mg
Black Cardamom Nutrition Facts Per 100 grams

கருப்பு ஏலக்காய் நன்மைகள்(Black Cardamom Benefits in Tamil)

கருப்பு ஏலக்காயின் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகள், இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், சுவாச மண்டலத்தைப் பாதுகாத்தல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல் மற்றும் சில புற்றுநோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும்.

1.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

கருப்பு ஏலக்காயில் அதிக அளவில் காணப்படும் குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும், தோல் சுருக்கங்கள், கறைகள் மற்றும் வயது புள்ளிகள் போன்ற வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவுகின்றன.

2.நாள்பட்ட நோய்(Chronicle Disease) ஏற்படுவதை தவிர்க்க உதவும்

கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆவியாகும் கலவைகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுத்து இதய நோய், முடக்கு வாதம், புற்றுநோய் மற்றும் சில நரம்பியக்கடத்தல் நோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகின்றன.

3.வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

கருப்பு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தை ஏற்படுவதை தடுக்கின்றன.

4.சுவாச பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவும்

கருப்பு ஏலக்காய் சுவாசக் குழாயில் உள்ள வீக்கத்தைப் போக்க உதவுகிறது. மேலும், அடைப்பு மற்றும் நெரிசல் ஏற்பட காரணமான நோய்த்தொற்றுகளையும் அழிக்க உதவுகிறது.

5.உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவும்

இந்த வாசனை பொருள் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றின் செயல்திறனை மேம்படுத்தி அதிகப்படியான நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது என்று ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

6.நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

கருப்பு ஏலக்காயில் காணப்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலம் தொற்றுநோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

7.உணவு செரிமானத்தை மேம்படுத்த உதவும்

கருப்பு ஏலக்காயில் காணப்படும் வேதிப்பொருட்கள் இரைப்பையின் செயல்திறனை மேம்படுத்தி குடலில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்யவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.

8.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

கருப்பு ஏலக்காய் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தம் உறைதல் போன்றவற்றை குறைத்து மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது எனற ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

Youtube – Don’t Forget To Subscribe!

This article discusses the health benefits of Black Cardamom in Tamil

Source: Organic Facts

மேலும் படிக்க:

மங்குஸ்தான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

வெண்ணெய் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

Disclaimer: இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இது ஒரு சுகாதார நிபுணரின் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று இல்லை. மேலும், சந்தேங்கள் மற்றும் தகவலை உறுதிபடுத்திக்கொள்ள வாசகர்கள் கண்டிப்பாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!